FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

8 October 2018

தென் கிழக்கு வங்கக் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான நிலை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது. இதையடுத்து இன்றை அறிவிப்பி, மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று வங்கக் கடலில் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார். 

வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேட்டி : 

“காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மினிக்காய் தீவுகளுக்கு வட மேற்கு திசையில் 920 கி.மீ.தூரத்தில் நிலைக்கொண்டுள்ளது. அது புயலாக வலுப்பெற்று ஓமன் கரை நோக்கி நகரக்கூடும். வங்கக்கடலில் அந்தமான் கடல்பகுதி மற்றும் அதை ஓட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. 

இது அடுத்து வரும் 3 தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா கரை நோக்கி நகரக்கூடும். மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் அக்.7 முதல் 12 –ம் தேதிவரை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கக்கடலில் மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதியில் அக்.7 முதல் 9-ம் தேதிவரை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மீமிசையில் 13 செ.மீ. மழையும் நெல்லை சங்கரன்கோவில், குன்னூர், அம்பாசமுத்திரத்தில் 8 செ.மீ.மழையும் பெய்துள்ளது. 

அடுத்து வரும் 2 தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், குமரி, நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தற்போதைய நிலைவரை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. நாளை விரிவாக கூறப்படும்.” என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

No comments:

Post a Comment