FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 October 2018

காலாண்டு தேர்வு விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. 

காலாண்டு தேர்வு விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. 

தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, மூன்று பருவ தேர்வுகளும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆண்டு இறுதி பொதுத்தேர்வும் நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், முதல் பருவ தேர்வும், காலாண்டு தேர்வும், செப்., 22ல் முடிந்தது.மறுநாள் முதல், தேர்வுக்கு பிந்தைய விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை நேற்றுடன் முடிந்தது. 

இதையடுத்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் துவங்க உள்ளன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இரண்டாம்பருவ பாட புத்தகங்கள் மற்றும், இரண்டாவது ஜோடி சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அனைத்து பள்ளிகளிலும், காந்தியடிகளின், 150வதுபிறந்த நாள் விழாவும், இன்று கொண்டாடப்பட உள்ளது.

No comments:

Post a Comment