FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 October 2018

அரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3%ஆக உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

*அரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 2% இருந்து 3%ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

*தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

*இதையடுத்து தமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது

*சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார்


*அப்போது விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடானது 3 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதலிடத்திற்கு வர அரசு அனைத்து உதவிகளையும் செய்யும், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களின் பலத்தை மதிப்பீடு செய்து திட்டமிட வேண்டும்


*இந்த அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் விளையாட்டுத் துறைக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது


*கிராமங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அரசு  நிதி உதவி வழங்கி வருகிறது


*சென்னை தவிர்த்து 31 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்திற்கு விளையாட்டு மைதானம், உபகரணங்கள் மற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டடோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment