FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 August 2018

TNPSC - குரூப்2 தேர்வு அறிவிப்பு 15ம் தேதிக்குள் வெளியிடப்படும்!

ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். 
2017ம் ஆண்டு நடந்த குரூப் 1 முதன்மைதேர்வில் எந்தவித  முறைகேடும் நடைபெறவில்லை. முதன்மை தேர்வுக்கான விடைகள் திருத்தும் பணி  நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாதத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும்.  அதாவது, தேர்வாணையம் ஓராண்டு கால அட்டவணையில் அறிவித்தபடி செப்டம்பர்  8க்குள் முடிவுகள் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

குரூப் 4, விஏஓ தேர்வை ஒன்றாக நடத்தியதால் அரசுக்கு 12 கோடி மிச்சம்டிஎன்பிஎஸ்சி குரூப் 4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு தனித்தனியாகத்தான் தேர்வுகளை நடத்தி வந்தது. இதனால், அதிகசெலவு ஏற்பட்டதாக டிஎன்பிஎஸ்சி கூறி வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வை ஒன்றாக டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இதனால், அரசுக்கு 12 கோடி ரூபாய் மிச்சம் ஏற்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு2016ல் நடந்த குரூப் 1 தேர்வு  முறைகேடு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில்சம்பந்தப்பட்ட தேர்வாணைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  போலீசார் நடத்தும் விசாரணைக்கு டிஎன்பிஎஸ்சி முழு ஒத்துழைப்பு கொடுத்து  வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment