FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 August 2018

திருமணப்பதிவையும் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்

தமிழகத்தில் பத்திரப்பதிவை போல திருமணப்பதிவும் இனி இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் முறை விரைவில் நடைமுறைக்கு வருகிறது. 
அது இன்று முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வருகிறது. அனைத்து வகையான சான்றிதழ்களையும் ஆன்லைன் வாயிலாக வழங்கும் முறை குறித்து சார் பதிவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளது. 

இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. மேலும், திருமணம், சீட்டு மற்றும் சங்கங்கள் இதன் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்யும் திட்டத்தை கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பிப்ரவரி 13ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. 

தற்போது பெரும்பாலான பத்திரங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில், திருமணம், சீட்டு, சங்கம் உள்ளிட்ட 17 இனங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை கொண்டு வர பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, சார்பதிவாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment