FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

24 August 2018

தலைக்கவசம் கட்டாயம் என்பது அமல்படுத்தப்படும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

இரு சக்கர வாகனம் ஓட்டும்போது பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல் செய்வதில் உறுதி என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது  கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. பத்திரிக்கை, தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழகத்தில் கட்டாய சீட் பெல்ட், ஹெல்மெட் குறித்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர ஆணையிடப்பட்டது. சீட் பெல்ட், ஹெல்மெட் அணிவது குறித்து முறையாக நடவடிக்கை இல்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். கார்களில் பயணிப்போர் அனைவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது. மேலும், சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல் செய்வதில் உறுதி என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment