முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள், அரசால் இயக்கப்படும் அனைத்து நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதேசமயம், கருவூல அலுவலகங்கள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு இயக்கப்படும்.
வாஜ்பாய் மறைவுக்கு ஏழு நாள்கள் தேசிய அளவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. அதன்படி, தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல் வரும் 22-ஆம் தேதி வரை அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் உள்ள கொடிக் கம்பங்களில் தேசியக் கொடியானது அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment