FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 July 2018

வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு கட்டணமா? வாட்ஸ் அப் நிறுவனம் ஆலோசனை!!

வதந்தி பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் 

வதந்தி பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் முதன்மை இயக்க அதிகாரி மேத்யூ தகவல் ஒளிபரப்பு துறை செயலாளர் அஜய் பிரகாஷ்-ஐ சந்தித்து விளக்கமளித்தார். வாட்ஸ்அப் மூலம் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க  அந்நிறுவனம் நடவடிக்கை எடுக்கும்படி மத்தியஅரசு வலியுறுத்தி இருந்தது. இதனை அடுத்து வதந்தி பரவுவதை தடுக்க  வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு கட்டணம் விதிப்பது குறித்து அந்நிறுவனம் ஆலோசித்து வருகிறது. 

வதந்தி பரவுவதை தடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படவேண்டும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. வதந்தி பரவுவதை தடுக்க வாட்ஸ்அப்பில் புதிதாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. Forward message-ஐ அடையாளம் காட்டும் குறியீடு மற்றும் ஒரு தகவலை பலருக்கு பகிர்வதில் கட்டுப்பாடு ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஆகும். இதேபோல் தேர்தல் நேரத்தில் பொய் செய்திகள் பரவுவதை தடுப்பதற்காக verificado முறையை பயன்படுத்த போவதாக தேர்தல் ஆணையத்திடம் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வதந்தி பரவுவதை வாட்ஸ்அப் தடுக்காவிட்டால் குற்றத்துக்கு துணை போனதாக அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது

See in browser

No comments:

Post a Comment