திருநெல்வேலி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ 3,25,000 வைத்திருந்த களக்காடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. இசக்கிமுத்து, எழுத்தர் திரு. சபாபதி ஆகியோரை கைது செய்துள்ளனர்
தனியார் உதவி பெறும் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியையிடம் பணி நியமனம் தொடர்பாக லஞ்சம் கேட்டபோது, அவரது தம்பி கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை.
லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக பிடிபட்ட நிலையில் போலீசாரின் கைப்பிடியில் இருந்து தனது கையை உதறிக்கொண்டு தப்பி ஓட முயன்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. இசக்கிமுத்து கண்ணத்திற்கு போலீசார் இரண்டு அறை பரிசளித்தனர்.
நேற்று AEEO (BEO) கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இருந்த அனைவரிடமும் இரவு 11 மணிவரை விசாரனை நடைபெற்றது.
ஒரு BEO ரூ 10,000/ கையில் வைத்திருந்தது ஏன் என கேட்டபொழுது, வங்கியில் கட்டுவதற்காக என fillup செய்து வைத்திருந்த challan ஐ காட்டியதால் அவர் வெளியே அனுப்பப்பட்டார். அது போல சில பெண் ஊழியர்கள் தங்கள் செலவுக்கு 200, 500 என வைத்திருந்தவர்களும் வெளியே அனுப்பப்பட்டனர். அதிகமாக பணம் வைத்திருந்தவர்களிடம் கணக்கு கேட்டு விசாரனை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலக நேர்முக உதவியாளர் மிகவும் நேர்மையானவர். லஞ்சம் வாங்காதவர் என்பதை புகார்தாரரே குறிப்பிட்டுள்ளார். அதை விசாரித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரும் உறுதி செய்துள்ளனர். அதனால் அவரும் அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.
லஞ்சப்பணம் ரூ 3,25,000/ ம் சூப்ரண்டு திரு. பரிமள செல்வம் டேபிளில் இருந்ததால் அவரிடம் விசாரனை நடைபெறுகிறது. லஞ்சப் பணத்தில் களக்காடு BEO திரு. இசக்கிமுத்து மற்றும் எழுத்தர் திரு. சபாபதி ஆகியோரின் கைரேகை இருந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பாகவே புகார்தாரரான ஆசிரியையின் தம்பியுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் திருநெல்வேலி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு வந்து நோட்டம் பார்த்துள்ளனர். மேற்கண்ட லஞ்சப் பேர்வழிகளின் பேச்சை நேரில் கேட்டுள்ளனர்.
இறுதியாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு. சந்திரசேகர் (நாகர்கோவிலை சேர்ந்தவர்) சொல்லித்தான் இந்த லஞ்சப் பணத்தை வாங்கினேன் என BEO திரு. இசக்கிமுத்து அவர்கள் கைப்பட எழுதி கொடுத்துள்ளதால் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும் விசாரனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment