FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 April 2018

கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக( STATUS QUO) வேட்பு மனுக்களை வாங்கவோ,வேட்பு மனுக்களை பரிசீலிக்கவோ அடுத்த கட்ட தேர்தல் தொடர்பாக எந்தவித தேர்தல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக( STATUS QUO) வேட்பு மனுக்களை வாங்கவோ, வேட்பு மனுக்களை பரிசீலிக்கவோ அடுத்த கட்ட தேர்தல் தொடர்பாக எந்தவித தேர்தல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக எம்எல்ஏ சக்கரபாணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்திலுள்ள. 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கான பல கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 5ம் தேதி தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்டது. கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் கூட்டுறவு தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை. ஆளுங்கட்சியினருக்கு சாதமாகவே நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆளுங்கட்சியினரே தேர்வு செய்யப்பட்டு
உள்ளனர்.
இந்த தேர்தலுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் மாநில பொறுப்பாளர்களாகவும்அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட பொறுப்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவர்கள் தங்களது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சியினரை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். எதிர்கட்சியினரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பலரது மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிமுகவினரை மட்டும் தேர்வு செய்துள்ளனர். பல இடங்களில் வாக்குப்பதிவே நடத்தாமல் தேர்வு செய்துள்ளனர். பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பால் தேர்தல்களை ஒத்தி வைத்துள்ளனர்.
முதல் கட்ட தேர்தலில் பெரும்பாலும் ஆளுங்கட்சியினரை தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது அடுத்த கட்ட தேர்தலுக்கு தயாராகியுள்ளனர். விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் தெரிந்தும், புகார்கள் வந்தும் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலியான வகையிலும், மோசடியான முறையிலும் தேர்தல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தேர்தல் கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல இடங்களில் பணி செய்ய விடாமல் ஆளுங்கட்சியினர், அரசு அதிகாரிகளுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து தன்னிச்சையான அமைப்பின் மூலம் விசாரணை நடத்தினால் உண்மை தெரியும்.
கூட்டுறவு தேர்தலுக்கு பின்னர், அவற்றை எதிர்த்தும், குறைகள் குறித்தும் முறையிட சட்டரீதியான தொழில்நுட்பம் இல்லை. கமிஷனின் கீழ் நடப்பதால் மாவட்ட அளவிலான அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
எனவே, கூட்டுறவு தேர்தல் தொடர்பாக கடந்த மார்ச் 5ல் வெளியிடப்பட்ட அறிவிப்பும், அதன்படி நடந்த தேர்தல்களும் சட்டவிரோதம் என்பதால், செல்லாது என அறிவித்து, சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது முன் விசாரணைக்கு வந்தது .அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் தற்போதைய நிலையே தொடர வேண்டும் (STATUS QUO )எனவும் , அதாவது கூட்டுறவு சங்க தேர்தல்
தொடர்பாக வேட்பு மனுக்களை வாங்கவோ, வேட்பு மனுக்களை பரிசீலிக்கவோ அடுத்த கட்ட தேர்தல் தொடர்பாக எத்த வித தேர்தல் நடவடிக்கை யும் எடுக்க கூடாது என உத்தரவிட்டு ஏப்.11 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மேலும், இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையர் இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment