FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

13 April 2018

செல்பேசிச் செயலியில் முன்பதிவில்லாப் பயணச்சீட்டு எடுக்கும் முறை நாளைமுதல் அமல்!!!

செல்பேசி மூலம் முன்பதிவில்லாப் பயணச்சீட்டுக்களைப் பெறும் UTS ONMOBILE 
என்கிற செயலி நாளைமுதல் தெற்கு ரயில்வேயின் அனைத்து நிலையங்களிலும் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்தச் செயலியைக் கூகுள், ஆப்பிள் ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ரயில்வேயின் R-Wallet, பயணச்சீட்டு முன்பதிவு மையம், ஐஆர்சிடிசி இணையதளம் ஆகியவற்றின் மூலம் நூறு ரூபாய் முதல் ஐயாயிரம் ரூபாய் வரை முன்கூட்டிச் செலுத்த வேண்டும். அந்தத் தொகையில் இருந்து பயணச்சீட்டுக்கான தொகை கழிக்கப்படும்_

_இந்த செயலியில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கிமீ தொலைவு வரையுள்ள பகுதிகளில் இருந்து பயணச்சீட்டை எடுத்துக் கொள்ளலாம். பயணச்சீட்டு எடுக்காத பயணிகள், டிக்கட் பரிசோதகரைப் பார்த்த பின் பயணச்சீட்டைப் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் இந்தச் செயலியில் பயணச்சீட்டு எடுக்க இயலாது_

No comments:

Post a Comment