FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 April 2018

இந்த ஆண்டு கடுமையான வெப்பம்..! எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்..!

ஒவ்வொரு ஆண்டும் கோடை களத்தில் அதிக வெப்பம் நிலவி வருகிறது இந்நிலையில் தற்போது கோடை காலம் நெருங்கிய சமயத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது



சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.


இந்நிலையில்,இந்த ஆண்டு கோடை வெப்பம் மிக கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.




ஏப்ரல்-ஜூன் வரை கடுமையான வெப்பம் இருக்கும்.அதில், கிழக்கு, மத்திய கிழக்கு மற்றும் தென் இந்திய பகுதிகளில் குறிப்பாக ஒடிசா, கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வழக்கத்தை விட வெப்பம் குறைவாக இருக்கும். ஏனெனில் அங்கு அப்போது பருவ மழைக்கான காற்று உருவாகும்...




அதே நேரத்தில் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடந்த ஆண்டுகளை விட வெப்பம் கடுமையாக இருக்கும்.




1901-ம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் கடந்த 2016-ம் ஆண்டில்தான் வெப்பம் மிக கடுமையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலம் பாலோடியில் அதிக அளவாக 123 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது என்பது கூடுதல்தகவல்

No comments:

Post a Comment