FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 April 2018

விடாமுயற்சியின் வெற்றி-நீதியின் குரலும் புதிய காப்பீடு திட்டமும்......

விடாமுயற்சியின் வெற்றி......

நீதியின் குரலும் புதிய காப்பீடு திட்டமும்.....

அன்பார்ந்த ஆசிரியர்களே , கரூர் மாவட்டம்-கடவூர் ஒன்றியம் இயக்க முன்னோடியும், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம்  அவர்களுடைய துணை வியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 . இதில் நமது TNNHIS ரூ.1,70,000 மட்டும் அனுமதித்தது. அதற்குமேல் தர மறுத்து  விட்டது.
எங்கெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கே நானே தோன்றுவேன் என பகவான் கிருஷ்ணர் கூறுவதாக படித்திருப்போம்அந்த வகையில் நமது மாணிக்கம் சார் அவர்கள்,
கரூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, தொடர் முயற்சியினால் கடந்த வாரம் தீர்ப்பு பெறப்பட்டது. தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும் மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன் நகல் இணைத்து அனுப்பப்பட்டு உள்ளது அவசியம் முழுமையாக படிக்கவும். நமது மருத்துவ செலவுகள்,அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS  ஏற்கவேண்டும்.ரூ.4,00,000க்குள் அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்து எனவே விழிப்புடன் இருக்கவும். மேலும்  இவ்வழக்கில் உதவிய முன்னாள் பொருளர் திரு.செங்குட்டுவன் மற்றும் TNTF வட்டாரச் செயலர் திரு.இராஜ்குமார் ஆகியோர்க்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு நமக்கு பெருமையும்,மகிழ்ச்சியும் அளிக்கிறது.இது போன்ற தீர்ப்பினை இதுவரை அரசூழியரும் ஆசிரியர்களும் எங்கும் பெற்றதாக செய்தி இல்லை. இது முன்னுதாரனமாக திகழும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment