------ தமிழ்நாடு தகவல் ஆணையம் விசாரணைக்காக வேடசந்தூர்
கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்----
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியத்தில் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகள் சார்பாக தணிக்கைத்தடை ஏற்பட்டு 37 ஆசிரியர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இவ்வழக்ககிற்கு தேவையான சில விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் திரு வீ. கோபிநாதன் ஆகிய நான் ,கடந்த 2016 ல் கல்வி அலுவலர்களுக்கு விண்ணப்பம் செய்து உரிய பதில் இல்லாததால் ஆணையத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது.


நாளைய தினம் 8.3.18-பிற்பகல் 2.30 மணிக்கு இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. விசாரணை முடிந்து உரிய தகவல் பெறும் பட்சத்தில் வேடசந்தூர் ஒன்றியம் மட்டுமல்லாமல் தமிழக அனைத்து ஒன்றிய ஆசிரியர்களின் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகள் பற்றிய வழக்குகள் முடிவிற்கு வரும் வாய்ப்பு உள்ளது.
வேடசந்தூர் ஒன்றிய ஆசிரியர் அலுவலர் முதன் முறையாக தகவல் ஆணையம் விசாரணைக்காக செல்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இனி வருங்காலத்தில் இச்சட்டம் ஆசிரியர் மத்தியில் முக்கியத்துவம் பெறும்.
ஆசிரியர்களின் நியாயமான
கோரிக்கைக்காக
இயக்கப்பயணம்
தொடரும்.......
இவண்
வீ. கோபிநாதன்
தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர்.
No comments:
Post a Comment