காற்றழுத்த தாழ்வு பகுதி மாலத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைக்கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதங்களில்தான் வெயில் கொளுத்தும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் நீர்நிலைகள் வேகமாக வற்ற தொடங்கியுள்ளன. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது. இந்நிலையில் தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மேகமூட்டமும் அவ்வப்போது வெயிலும் நிலவி வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலத்தீவு அருகே நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகம், கன்னியாகுமரி, மாலத்தீவு பகுதிக்கு மேலும் 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடற்பகுதியில் 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வரும் 15ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் குமரி கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு இடையே நிலை கொண்டிருப்பதாகவும் இதனால் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தெடார்பாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் பேசுகையில்:
இந்திய பெருங்கடல், தென் மேற்கு வங்கடல் மற்றும் தெற்கு இலங்கை கடல் இலங்கை மற்றும் குமரிக்கடல் மாலத்தீவை ஒட்டிய பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த தாழ்வு பகுதி , தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று , மாலத்தீவுக்கு கிழக்கே 290 கி.மீட்டர் வேகத்தில் மேலும் லட்சத்தீவு நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென்தமிழகத்தில் 13, 14 தேதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. வடக்கு தமிழகத்தில் லேசான மழை பெய்யலாம்.
குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரி மாவட்ட மீனவர்கள் 13, 14, 15 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம். குறிப்பாக மாலத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் , அதிகப்பட்சமாக பாபநாசத்தில் 4 செ.மீ, மழையும், தொண்டியில் 2 செ.மீ., சிவகாசி, இளையான்குடியில் தலா ஒரு செ.மீ., மழையும் பெய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்று பெரம்பலூரில் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்துள்ளது. காலையில் குமரி, நெல்லை, விருதுநகரில் லேசான மழை பெய்துள்ளது

No comments:
Post a Comment