FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 February 2018

தமிழ்நாடு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் அனைத்துப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கு....

தமிழ்நாடு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் அனைத்துப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கு , கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் ஆசிரியர்களுடைய வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து ₹29 இலட்சம் கையாடல் செய்ததாக உ.தொ.க.அலுவலர் பிரேம்ஆனந்த் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சூளகிரி உ.தொ.க. அலுவலக இளநிலை உதவியாளர் பாலமுரளி என்பவரும் கண்காணிப்பாளர் நாகராஜன் என்பவரும் இனைந்து நடத்திய முறைகேட்டில் விழிப்புடன் செயல்படாமல் பணியாளர்களை முழுமையாக நம்பி கையொப்பம் இட்ட காரணத்தால்தான் உ.தொ.க.அலுவலரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்குக்கு உரியவர்களுக்கும் மேலும் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிய வருகிறது. எனவே ,முழுமையாகவும் முறையாகவும் விசாரணை செய்து தவறிழைத்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட உதவித் தொடக்கக்கல்வி அலுவலருக்கு நடவடிக்கையில் இருந்து விலக்கு அளித்திடவும் வேண்டும் எனவும் இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்கவும் "அமைச்சுப் பணியாளர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது" என்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் அவர்களிடமும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களிடமும் நமது சங்கத்தின் சார்பில் வலியுறுத்துவோம். அதேசமயம் இதுவரை வெளிவந்துள்ள பலநிகழ்வுகளிலும் அமைச்சுப் பணியாளர்களை முழுமையாக நம்பி எதைப்பற்றியும் கவலைப்படாமால் கையொப்பமிட்ட அலுவலர்களே பிரச்சினையில் சிக்கி உள்ளனர்.எனவே, எவ்வளவு பணிச்சுமைகள் இருந்தாலும் நிதி தொடர்பான இனங்களில் யாரையும் நம்பி கையெழுத்திடுவதை முற்றிலும் தவிர்த்து தங்களையும் தற்காத்துக்கொண்டு பதவிக்கும் வீண் பழியேற்படா வண்ணம் செயல்பட வேண்டுமென மாநில அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
மாநிலப் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம்.

No comments:

Post a Comment