FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 January 2018

கல்வி சுற்றுலாவுக்குகட்டுப்பாடு விதிப்பு!!!

உயரதிகாரிகளின் முன்அனுமதியின்றி, ஆபத்தான இடங்களுக்கு மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லக்கூடாது; விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,’ என, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில், அரையாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில், ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களை, கல்வி சுற்றுலாஅழைத்து செல்வது வழக்கம்.ஒவ்வொரு ஆண்டும் இது வழக்கமாக நடைபெறும் என்ற போதும், மாணவர் பாதுகாப்பு கருதி, பல்வேறு உத்தரவுகளை கல்வித்துறை, அவ்வப்போது பிறப்பிக்கும்.சில தினங்களுக்கு முன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் மூலம் தலைமைஆசிரியருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,’பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் எனில், அந்த இடம், நாட்கள் உள்ளிட்ட விவரங்களை, உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, அனுமதி பெற வேண்டும்.

குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கும், இடம் பற்றி முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாணவியரை, பெண் ஆசிரியர்களுடன் அழைத்து செல்ல வேண்டும். ஆபத்தான, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்லக்கூடாது,’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment