FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

21 December 2017

EMIS ID CARD ANDROID APP சில தகவல்கள்

*EMIS ID CARAD ANDROID APP சில தகவல்கள்-அதிகாரபூர்வமானது:*

*EMIS-Student Id Card*
*அரசு மற்றும் நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு "அடையாள அட்டை" வழங்குதல் சார்பாக மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய  "Emis android application"  வெளியிடப்பட உள்ளது.*

*1.ஆண்ட்ராய்ட் செயலி வெளியீடு மற்றும் பதிவு செய்தல் தொடர்பாக முறையான அறிவிப்பு Emis இணையதளத்தில் வெளியிடப்படும்.*

*2.இணையதளத்தில் பதிவு செய்துள்ள      மாணவர்களின் பெயர்கள் மட்டுமே ஆண்ட்ராய்ட் செயலியில் காட்டப்படும்.இணையதளத்தில் இல்லாத மாணவர்களின் பெயர்கள் ஆண்ட்ராய்ட் செயலியில் இருக்காது.*

*3.ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்தி புகைப்படம்,இரத்தவகை, ஆதார் எண் போன்றவற்றை பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.*

*4.அடையாள அட்டை அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் தனியார் பள்ளிகள் இந்த செயலியை பயன்படுத்த தேவை இல்லை.*

*5.Student id செயலியை அடையாள அட்டைக்கான தகவல்கள் பதிவேற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும்.புதிய பதிவு,சேர்த்தல், நீக்கல் செய்ய இயலாது.*

*6.வருகைப்பதிவேட்டில் உள்ள மாணவர் பெயர்களும், இணையதளத்தில் உள்ள மாணவர் பெயர்களும் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.*

*7.பதிவேற்றம் செய்ததும் செயலியை பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.*

Regards
S.Thamaraiselvan
State Emis cell


No comments:

Post a Comment