FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

31 December 2017

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் 31.12.17-முடிவுகள்

வணக்கம். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று 31.12.17 சென்னையில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூடடணி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. திரு.இரா. தாஸ்,திரு. மு.அன்பரசு தலைமை ஏற்றனர். அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
1) 6.1.18 அன்று CPS ரத்து அறிக்கை வெளியிடுதல்; பொங்கல் போனஸ் வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் காலை மணி 10 முதல் 1 மணி வரை தொடர்முழக்க போராட்டம் நடத்துவது.
2.) 3.1.18 அன்று மாவட்ட கூட்டங்களை நடத்துவது.
4) 9.1.18 & 10.1.18 நாட்களில் அனைத்து அரசியல் கட்சி/சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பது. 5)4.2.18 அன்று சென்னையில் CPS ஒழிப்பு கருத்தரங்கம் நடத்துவது. அதில் நீதியரசர்,வழக்கறிஞர்,பத்திரிக்கையாளர்,பாராளுமன்ற உறுப்பினர்,தொழிற்சங்க தலைவர்,ஆகியோரை பங்கேற்க அழைப்பது.
6) ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற உள்ள உயர்மட்டக்குழு கூட்டத்தில் தொடர்மறியல் போராட்டத் தேதியை அறிவிப்பது.
7) வழக்கு மற்றும் போராட்ட நிதி சங்கத்திற்கு ரூ. 20000/_ என முடிவு செய்யப்பட்டது.இவண். ஜாக்டோ-ஜியோ ,ஒருங்கிணைப்பாளர்கள்.

No comments:

Post a Comment