தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கடவூர் வட்டார செயற்குழு கூட்டம் 13.11.2017 மாலை 4.30 மணியளவில் தரகம்பட்டியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:
1) இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்பினை நீக்கும் பொருட்டு மாநில, மாவட்ட கிளை முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
2)CPS முறையினை உடனடியாக இரத்து செய் து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசினை கேட்டுக்கொள்கிறது.இயக்க நடவடிக்கைகளுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்குவது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
3) 7வது ஊதியக்குழு, ஊதிய நிர்ணயம் செய்வதில், முழு பணப்பயன் பெற ஆசிரியர்களுக்கு வழிகாட்டுவது.
4) ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட நமது இயக்க உறுப்பினர்களுக்கு வட்டார கிளை பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது. எதிர் வரும் போராட்டங்களில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
5)ஆசிரியர் பேரணி இயக்க இதழ் சந்தா அனைத்து உறுப்பினர்களும் செலுத்த இச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
6)உறுப்பினர் சந்தா மற்றும் போராட்ட நிதி நிலுவைகளை விரைவில் வழங்க உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறது.
7) ஆசிரியர் பிரச்சினைகளுக்காக உ.தொ.க.அலுவலரை சந்தித்து முறையிடுவது என முடிவாற்றப்படுகிறது.
--- இவண் வட்டார பொறுப்பாளர்கள்,TNTF, கடவூர்.
No comments:
Post a Comment