அன்பான ஆசிரியர்களே!!
உலக புகழ்பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் செம்மொழியாம் *தமிழ் மொழிக்கு இருக்கை* அமைத்திட¸ புலம் பெயர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்களால் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு¸ அதனை நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. தழிழ் மொழிக்கு இருக்கை என்றால் செம்மொழியாம் தமிழ்மொழி குறித்த ஆராய்ச்சி மேற்கொள்வதாகும். இருக்கை அமைக்க ஆகும் செலவு மொத்தம் தோராயமாக ரூ40 கோடி. தமிழக அரசு ரூ.10 கோடி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கொடை வழங்கி வருகின்றனர். அதன் படி நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொதுக்குழுவில் இயக்க அறக்கட்டளையின் சார்பாக தமிழ்இருக்கைகாக ரூ.ஒரு லட்சம் நன்கொடை வழங்குவதாகவும்¸ மேலும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் நன்கொடை வழங்க வலியுறுத்தி ரூ.1 கோடி வரை நமது இயக்கம் சார்பாக நிதி அனுப்ப தீர்மானிக்கப்பட்டது. அதன் முதல் தொகையாக இன்று நமது இயக்க அறக்கட்டளையின் நிதி ரூ.1 லட்சம் மற்றும் நமது இயக்கத்தின் அறக்கட்டளை அறங்காவலரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான மதுரை பெரியவர் ராமசாமி அய்யா அவர்கள் ரூ.5லட்சம் நன்கொடையினை இயக்க நிறுவனர் அய்யா செ.மு வழியாக வழங்கினார்கள். இதனை பெற்று வங்கியில் செலுத்த வழிகாட்டும் முகத்தான் வடஅமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் திரு.கார்டுவெல் வேலுநம்பி மற்றும் வடஅமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் செய்தி தொடர்பாளர் திரு. ராமசாமி அவர்களும் பெற்றுக்கொண்டனர். கொடைவழங்கும் விழாவில் மாநில பொதுசெயலளர் திரு.க.செல்வராசு மற்றும் மதுரை பொறுப்பாளர்களுடன் கரூர் மாவட்டம் சார்பாக பாசத்திற்குறிய தலைவர் சுந்தரகணேசன் ¸ மாவட்டச்செயலாளர் திரு.பெரியசாமி¸ அண்ணன் திரு.பரணிதரன், மாவட்டப்பொருளர் இரா.இரஞ்சித்குமார்¸ ¸ திரு.இரா.வெங்கடேசன ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டம் மட்டுமே கொள்கையாக கொண்டிருக்காமல் நமது இயக்கத்தில் பொதுநல தொண்டு மிகவும் பெருமையடையச் செய்கிறது. ஆசிரியர்களாகிய நாமும் தமிழ்இருக்கை அமைக்க நம்மால் முடிந்த உதவியினை நேரடியாக தங்கள் இணையவங்கி மூலம் அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.தொகையினை அனுப்பும் விவரம் பின்னர் அனுப்பப்படும். பெருமையுடன் *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ¸ கரூர் மாவட்டம்.*
No comments:
Post a Comment