FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 October 2017

தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை

தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான ‘சாயில் பவர் கம்பெனி லிமிடெட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15 

பணி: Engineering Executive Trainees

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. எலக்ட்ரிக்கல் - 04
2. மெக்கானிக்கல் - 07 
3. இன்ஸ்ட்ருமென்டேசன் - 02
4. எலக்ட்ரானிக்ஸ் - 02

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் துறைகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட்-2017 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2017. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nspcl.co.in  அல்லது http://jobapply.in/nspcl2017eet/NSPL_Adv_Eng.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
 

No comments:

Post a Comment