ஆசிரியர் இலச்சினைக்கு உச்சநீதி மன்றம் அனுமதித்ததா?
தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்களுக்கு என்று தனி இலச்சினையைப் பயன்படுத்த உச்சநீதி மன்றமே அனுமதி அளித்துவிட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.
☀இதன் உண்மைத் தன்மைக்கான எவ்வித சான்றும் அதில் இல்லை.
☀மேலும் அதில், "மருத்துவர் & வழக்கறிஞர்கள் பயன்படுத்த அனுமதித்தது போல" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
☀உண்மையில் இவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததா? அளிக்க முடியுமா? அளிக்க வேண்டிய அவசியமுண்டா? என பல கேள்விகள் எழுகிறது.
☀மருத்துவர் & அவசரச் சிகிச்சை வாகனங்களில் சிவப்பு நிற '+' குறி இலச்சினையாக இடம்பெற்றிருக்கும். உண்மையில் இது இவர்களுக்கானதே அல்ல.
☀செஞ்சிலுவை இயக்கத்திற்காக, 1949-ம் ஆண்டு ஜெனீவா மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இலச்சினை அது.
☀இதை மற்றவர்கள் பயன்படுத்துவது தண்டனைக்குறிய குற்றமாகும். ஆனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதை மருத்துவர் உள்ளிட்ட பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
☀2007-ல் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) இந்திய மருத்துவக் குழுமத்திற்கு(IMC) இது குறித்து அறிவுறித்தி, தங்களின் இலச்சினையைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தியது.
☀அதன்பின்னரே, சிவப்பு நிற (90%) '+' குறியினுள் Dr அல்லது Rx என்று குறியிட்ட இலச்சினையைப் பயன்படுத்த IMC முடிவெடுத்தது.
☀இந்த இலச்சினையையும் MBBS மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதியுண்டு என IMC கூறியுள்ளது.
☀இதனை சித்தா, ஆயுர்வேதா, கால்நடை மருத்துவர்களோ, மருந்தகங்களோ பயன்படுத்தக் கூடாது.
ஒரு இலச்சினையைப் பயன்படுத்துவதில் இத்தனை வில்லங்கங்கள் உள்ள சூழலில்,
☀ஏதோ ஒரு இலச்சினையை அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது என்று அறிவைப் போதிக்கும் ஆசிரியர்களே பகிர்ந்து வருவது வியப்பை அளிப்பதாகவே உள்ளது.
ஓரு திறமைமிக்க ஆசிரியர் எனில் இது போன்ற தகவலைப் பார்த்தவுடன் உங்களின் மனதில்,
☀உச்சநீதி மன்றத்தில் இதுக்காக வழக்காடியது யார்?
☀இதை வடிவமைத்தது யார்?
☀தீர்ப்பளித்தது யார்?
☀தீர்ப்பின் விபரம் என்ன?
என்பன போன்ற கேள்விகள் எழுந்திருக்க வேண்டும் அல்லவா!?

No comments:
Post a Comment