FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 October 2017

எம்.டி. சித்தா படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

முதுநிலை சித்த மருத்துவப் (எம்.டி) படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி சென்னை மற்றும் பாளையங்கோட்டை ஆகியவற்றில் 2017 -2018 ஆம் கல்வியாண்டில் மூன்றாண்டு எம்.டி. சித்தா பட்டப் படிப்புக்கு மொத்தம் 94 இடங்கள் உள்ளன.
இந்தப் படிப்புக்கு அகில இந்திய ஆயுஷ் முதுநிலை பட்டப் படிப்பு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான தகவல் தொகுப்பேடு, விண்ணப்பங்கள் தமிழக சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் தேர்வுக்குழுவுக்கு சென்று சேர வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு 
சுகாதாரத் துறையின் இணையதளத்தைப் பார்வையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment