FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 September 2017

தமிழக சிறப்பு காவல் படை தயார் நிலையில் இருக்க டிஜிபி திடீர் உத்தரவு

அனைத்து சிறப்பு காவல் படையும் தயார் நிலையில் இருக்க டிஜிபி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியம் சம்பவம் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 




தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விதமான சிறப்புக் காவல் படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று இதன் மூலம் அறிவுறுத்தபப்டுகிறது. குறிப்பாக 19 மாவட்டங்களில் உள்ள சிறப்புக் காவல் படைகள் உச்ச பட்ச தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த தகவலானது மாநகர காவல்துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வழி அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அசாதாரணமான சூழ்நிலைகளில்தான் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதால் காவல்துறை வட்டாரங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

No comments:

Post a Comment