FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 September 2017

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியரின் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டாம்

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியரின் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டாம் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  
தமிழக அரசின் அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- 


வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை கோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்க வேண்டும்.


அந்த போராட்ட நாட்களை சனிக்கிழமைகளில் வேலை பார்த்து ஈடுகட்டுவதற்கு தயாராக உள்ள ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று தலைமைச் செயலாளர் அளித்த உத்தரவாதம் பதிவு செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.


சனிக்கிழமை, விடுமுறை நாட்களில் வேலை பார்த்து பணிக்கு வராத நாட்களை ஈடுகட்டுவதாக ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்துக்கு வராமல் போயிருந்த நாட்களுக்கும் சம்பளத்தை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும்.


சனிக்கிழமை, விடுமுறை நாட்களில் அவர்கள் பணியாற்றுவதற்கு ஏற்ற திட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment