FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

20 September 2017

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து இன்று துவக்கம் : வதந்தி பரப்பினால் நடவடிக்கை

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து இன்று முதல் (செப்.20) வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நடக்கிறது. இதற்கு காரணம் 'ரோட்டா வைரஸ்'தான். 



இந்த வைரசை மழைக் காலத்தில் போலியோ சொட்டு மருந்துபோல ஒரே 
நேரத்தில் வழங்கினால் அழிக்க முடியும். இதனால் ரோட்டா வைரஸ் சொட்டு மருந்தை செப்.7ம் தேதி காலை 7:00 மணி முதல் கொடுக்க சுகாதாரத்துறை திட்டமிட்டது. செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்.6ம் தேதி நள்ளிரவில் சொட்டு மருந்தை வழங்க வேண்டாம் என திடீரென உத்தர விடப்பட்டது. இந்நிலையில் ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து குழந்தைகளுக்கு இன்று முதல்(செப்.20) வழங்கப்பட உள்ளது. இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. 
அவதுாறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment