FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 May 2017

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டம்*

*கீழ்க்கண்ட கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழகம் முழுவதும் கலந்தாய்வு மையங்களில் இன்று காலை 10.30 மணி அளவில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது*

01.*பெண்ணாசிரியர்களை இரவு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காத்திருக்க செய்து ஒன்றிய அளவிலான கலந்தாய்வினை நடத்திய சாத்தியமற்ற ஆன்-லைன் முறையை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டிக்கிறோம்.


2.*அரசுபள்ளிகளை பாதுகாக்க அமைச்சர் மற்றும் இயக்குநர் ஆசிரியர் இயக்க தலைவர்களின் கலந்தாலோசனை கூட்டங்களை நடத்திவிட்டு பள்ளிகளுக்கு மூடுவிழா காணும் வகையில் மாணவர்நலனில் அக்கறையற்ற முறையில் உபரி பணியிடம் நிர்ணயம் செ ய்வதை கண்டிக்கி றோம்*


3.*42-நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் தொடர்ந்து 4-ஆண்டுகளாக வழங்காமலும் சேலம் போன்ற மாவட்டங்களில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் வழங்காமலும் தொடக்கக் கல்வித்துறையை மேம்படுத்தக்கூறும் அரசின் நிலையை கண்டிக்கிறோம்*

4.*இடைநிலை மற்றும் பட்டதாரி தேவைப்பணியிடங்களை இக்கலந்தாய்விலையே நிரப்பிடும் வகையில் பணியிடங்களை ஒதுக்கீடு செய்து கல்வி நலன் காத்திடுக*

செ.பாலசந்தர்
TNPTF பொதுச்செயலாளர்.

No comments:

Post a Comment