FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

31 May 2017

கல்லூரி மாற்றுச் சான்றிதழில் தந்தை பெயர் இனி கட்டாயமில்லை?

கல்லூரி மாற்றுச் சான்றிதழில் தந்தை அல்லது தாயின் பெயரை இனி சேர்த்துக் கொள்ள வகை செய்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விரைவில் அனுமதி வழங்க உள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் மாணவர்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப தந்தை அல்லது தாயின் பெயரைக் குறிப்பிட வகை செய்ய வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட யோசனையை ஏற்றுக்கொள்கிறோம். விரைவில் அதற்கு அனுமதி வழங்கப்படும் என்றார் ஜாவடேகர்.
முன்னதாக, இந்த யோசனையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் மேனகா காந்தி முன்வைத்தார்.

இதுதொடர்பாக ஜாவடேகருக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மகன் அல்லது மகளை கல்லூரியில் சேர்க்கும்போது தந்தையின் பெயர் கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்ற சோதனையை எதிர்கொள்வதாக கணவரைப் பிரிந்துவாழும் பெண்கள் என்னிடம் முறையிட்டனர்.
எனவே, இதுகுறித்து பரிசீலனை செய்யப்படுவது அவசியம் என்று அதில் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், அமைச்சர் மேனகா காந்தி விடுத்த கோரிக்கையின்பேரில், 'கடவுச்சீட்டில் தந்தை அல்லது தாய் என்று யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்' என்று விதிமுறைகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் மாற்றம் செய்து உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment