FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

7 April 2017

கரூர் பரமத்தியில் 107 டிகிரி வெயில்

தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், மழைக்கும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மத்திய மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தென்தமிழகம் வரை நிலப்பரப்பில் மேலடுக்கு சுழற்சி உருவானது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 30 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது: நிலப்பரப்பில் உருவான மேலடுக்கு சுழற்சி வலுவிழந்துவிட்டது. இருப்பினும் வெப்பச்சலனத்தின் காரணமாக இடிமேகங்கள் உருவாகி, உள்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வெயிலைப் பொருத்தவரை கடற்காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் சற்று குறைவாகக் காணப்படும். உள்மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கவே செய்யும் என்று தெரிவித்தனர்.
9 இடங்களில் சதம்: வியாழக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் உள்மாவட்டங்களிலேயே அதிக வெப்பம் காணப்படுகிறது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 107 டிகிரி வெப்பம் பதிவானது. இந்தக் கோடைக்காலத்தில் 107 டிகிரி வெப்பம் முதன்முறையாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
கரூர் பரமத்தி 107
வேலூர் 105
திருப்பத்தூர்,
திருச்சி, தருமபுரி 104
சேலம், மதுரை,
பாளையங்கோட்டை 103
கோவை 101
சென்னை 99

 

No comments:

Post a Comment