வருங்கால வைப்பு நிதி அமைப்பில் செலுத்திய பணம், ஓய்வூதிய முதிர்வுத் தொகை, காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை இணையதளம் மூலமாக விண்ணப்பித்துப் பெறும் வசதி, வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தற்போது காப்பீட்டுத் தொகை, முதிர்வுத்தொகை ஆகியவற்றை கோரி, சுமார் ஒரு கோடி விண்ணப்பங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (இ.பி.எஃப்.) கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த விண்ணப்பங்களை இ.பி.எஃப். அமைப்பின் ஊழியர்கள் சரிபார்த்து, சந்தாதாரர்களுக்கு உரிய தொகையை வழங்குவதற்கு கால தாமதமாகிறது. எனவே, அவர்களுக்கு தாமதமின்றி சேவைகளை வழங்குவதற்காக, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து, இ.பி.எஃப். ஆணையர் வி.பி.ஜாய், கூறியதாவது: அனைத்து இ.பி.எஃப். அலுவலகங்களும் இன்னும் இரண்டு மாதங்களில் மையக் கணினி அமைப்பு (சர்வர்) மூலம் இணைக்கப்படும். அதன் பிறகு, அனைத்து வகையான விண்ணப்பங்களுக்கும் இணையதளம் மூலமாகவே சேவைகள் அளிக்கப்படும்.
இதற்காக, முதல் கட்டமாக, 50 மண்டல அலுவலகங்கள் தற்போது மையக் கணினி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 123 மண்டல அலுவலகங்களும் மையக் கணினி அமைப்புடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
இணையவசதி முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, சந்தாதாரர்கள் விண்ணப்பித்த சில மணி நேரத்திலேயே அவர்களது விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சேவையை வழங்குவதற்கு இ.பி.எஃப். அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, அனைத்து பி.எஃப். சந்தாதாரர்களும், ஓய்வூதியதாரர்களும் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்று பி.எஃப். அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், சந்தாதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு, வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment