FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

20 February 2017

உள்ளாட்சித் தேர்தல் மே 15க்குள் நடத்தப்படும் - ஹைகோர்ட்டில் மாநில ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மே 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவதாக உத்தேசம் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மாநில தேர்தல் அதிகாரிகள், உள்ளாட்சித் தேர்தலை மே 15ஆம் தேதிக்குள் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறினர்.

அதற்கு நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தலுக்கான உத்தேச தேதி தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சரியான தேதியை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment