தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அனைத்து மாநில, மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களுக்கும் மாநில மையம் சார்பில் வாழ்த்துக்கள். மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் இன்று நமது கலாச்சாரத்தையும்,பண்பாட்டையும்,பாரம்பரியச் சிறப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் தற்போதைய தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு வாய்ப்பு உள்ள இடங்களில் நமது ஆதரவை அளிக்க வேண்டும்.அதே போன்று அனைத்து பகுதி மக்களையும் மிகக் கடுமையான இன்னல்களுக்கும் தற்கொலைகளுக்கும் காரணமாக இருந்து வரும் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு விஷயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக மக்களிடையே பிரச்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் அடிப்படையில் 31/01/2017 ல் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள மனிதச் சங்கிலி போராட்டம் உட்பட அனைத்து போராட்டங்களிலும் மாவட்டக் கிளைகள் ஆசிரியர்களை திரட்டிப் போதிய ஆதரவு கொடுக்கவேண்டும் எனவும் மாநில அமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.(செ. பாலசந்தர், பொதுசெயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி)
No comments:
Post a Comment