FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

14 January 2017

'பவர்' அடிப்படையில் பத்திர பதிவு விதிமுறையில் வருகிறது மாற்றம்.

'பவர்' எனப்படும், பொது அதிகார ஆவணம்அடிப்படையிலானபத்திரப்பதிவுக்கு, உரிமையாளர் உயிர்வாழ் சான்றை கட்டாயமாக்க,
பதிவுத்துறைதிட்டமிட்டுள்ளது. சொத்து பரிவர்த்தனையில், நேரடியாகபங்கேற்க முடியாத உரிமையாளர்கள், முகவர்களைநியமிக்கலாம். 

இதற்காக, முகவர்களுக்கு பொது அதிகார ஆவணம்வாயிலாகஅதிகாரம் வழங்கலாம். இத்தகைய ஆவணங்களைபோலியாகதயாரித்து, நில மோசடி நடப்பதாகபுகார்கள் வந்தன. இதையடுத்து, 'பவர்' அடிப்படையில், சொத்து விற்பனையைபதிவுசெய்யும் போது, அதிகாரம் கொடுத்தவர்உயிருடன்இருக்கிறார் என்பதற்கான, மருத்துவ சான்றிதழை தாக்கல்செய்வது, 2013 பிப்., 1 முதல், கட்டாயமானது. இதற்கானசுற்றறிக்கையின், எட்டாவதுபத்தியில், '2013 பிப்., 1 அன்றோ, அதற்கு


முன்னரோபதிவு செய்யப்பட்ட, பவர் அடிப்படையிலானபதிவுகளுக்கு, உரிமையாளரின் உயிர்வாழ் சான்றுஅவசியமில்லை' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்படி, முன்னரே, 'பவர்' வாங்கி வைத்துள்ளதாகவும், அதற்கு, உரிமையாளர் உயிருடன் இருப்பதற்கான சான்று தேவையில்லைஎனவும்கூறி, மோசடியாக பத்திரப்பதிவுகள் நடப்பதாக, புகார்கள்எழுந்தன.


இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் சமீபத்தில்பிறப்பித்தஉத்தரவுப்படி, இதற்கான சுற்றறிக்கையை மாற்றபதிவுத்துறைமுடிவு செய்து உள்ளது.



இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர்கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்களை மாற்ற நடவடிக்கைஎடுக்கப்பட்டுவருகிறது. பொது அதிகாரஆவணம்அடிப்படையிலான அனைத்து பதிவுகளுக்கும், உயிர்வாழ்சான்று கட்டாயம் என்ற வகையில் மாற்றம்இருக்கும். இது தொடர்பான அறிவிப்புவிரைவில் வெளியாகும். இவ்வாறுஅவர் கூறினார்.

No comments:

Post a Comment