FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

11 December 2016

வர்தா புயல் எதிரொலி- சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வர்தா புயல் மிரட்டல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள அதி தீவிர வர்தா புயல் சென்னைக்கு வெகு அருகே நெருங்க வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயலானது நாளை பிற்பகல் வாக்கில் சென்னைக்கு மிக மிக அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சென்னையிலேயே இது கரையைக் கடக்கலாம் என்றும் ஒரு கணிப்பு கூறுகிறது.

இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.



இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பிறப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment