FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 December 2016

அரியலூர் அருகே, நிலப்பட்டா மாற்றத்திற்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு, 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது

அரியலூர் அருகே, நிலப்பட்டா மாற்றத்திற்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு, 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் வைத்தியநாதன். கடந்த 2012-ஆம் ஆண்டு சந்திரபோஸ் என்பவர், நிலப்பட்டா மாற்றத்திற்காக வைத்தியநாதனிடம் சென்றபோது, அவர் 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சந்திரபோஸ் புகார் அளித்ததையடுத்து, அவரிடம் ரசாயணம் தடவிய 2,500 ரூபாய் நோட்டுக்களை போலீஸார் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை வைத்தியநாதன் வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம், வைத்தியநாதனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment