FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 December 2016

மாணவர்களிடம் போதை பொருளை தடுக்க புதிய திட்டம் தேவை : 6 மாதத்தில் தயாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

நோபல் பரிசு பெற்றவரான கைலாஷ் சத்யார்தி என்பவர் நடத்திவரும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2014ல் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக ஆய்வு நடத்தி, அதை தடுத்து நிறுத்த வேண்டும். 
போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி கிடக்கும் மாணவ-மாணவிகள் நலனுக்காக மறுவாழ்வு மையங்களை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி சந்திராசூட் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. 

அதில், ‘‘போதைப்பொருள் பயன்பாட்டால் மாணவ-மாணவியருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக, 6 மாதங்களுக்குள் மத்திய அரசு நாடு தழுவிய ஆய்வை நடத்த வேண்டும். மேலும், மாணவ-மாணவியரிடையே போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தேசிய அளவிலான ஒரு செயல்திட்டத்தை அந்த காலத்திற்குள் தயாரிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீயவிளைவுகள் தொடர்பான அறிவுரைகளை பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்’’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment