FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

16 November 2016

காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பு: பரவலான மழைக்கு வாய்ப்பு

       காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகத்தில் பரவாக மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

         வங்கக் கடலில் உருவாகியிருந்த மேலடுக்கு சுழற்சியானது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி, குமரிக் கடலில் நிலவி வந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. 

       இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 140 மி.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 70 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் 40 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நகர்ந்து குமரிக்கடலில் நிலை கொண்டுள்ளது. 
இந்த நிலையில், குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தெற்கு கோவா கடல்பகுதி வரை பரவியுள்ளது.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் சற்று பலத்த மழை வரை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment