புதுடெல்லி,ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் புதிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.மத்திய அரசு ரூ.500, ரூ1,000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து உள்ளது. மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள இதே மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு டிசம்பர் 30–ந் தேதி வரை காலஅவகாசம் அளித்தும் இருக்கிறது.எனினும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமலும், புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற முடியாமலும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரங்களிலும் சரிவர பணம் வைக்கப்படாததால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் பணம் மாற்றுவதற்கான, எடுப்பதற்கான உச்ச வரம்பை உயர்த்தி புதிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வங்கி கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ.24,000 வரை எடுத்துகொள்ளலாம். ஏடிஎம் மூலம் தினமும் ரூ.2.500 வரை எடுத்துக்கொள்ளலாம். பழைய நோட்டுகளுக்கு பதிலாக ரூ.4,500 வரை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். வங்கிகளில் பணம் மாற்றும் முதியோருக்கு தனிவரிசை அமைக்கப்படும்.மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடமாடும் ஏடிஎம்-கள் அமைக்கப்படும். ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க 2017 ஜனவரி 15-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள்,மூத்த குடிமக்களுக்கு தனிவரிசை ஏற்படுத்த வங்களிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment