FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

18 October 2016

EMIS:மாணவர்களின் தகவல் பதிவு செய்ய உத்தரவு.

கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில்,ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் தகவல்களை,இம்மாத இறுதிக்குள்,பதிவு செய்ய வேண்டுமென்ற,உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு,அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு,ஸ்மார்ட் கார்டு வழங்கும் நோக்கில்,கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்),மாணவர்களின் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன.இதில்,நடப்பாண்டில் புதிதாக சேர்ந்த,ஒன்றாம் வகுப்பு மாணவர்களின்,தகவல்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கக,மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்ணி வெளியிட்ட அறிக்கையில்,எமிஸ் இணையத்தளத்தில்,இரண்டாம் வகுப்பு முதல்,பிளஸ்2வரையிலான மாணவர்களின் தகவல்கள்,ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த மாணவர்கள்,வேறு பள்ளிக்கு மாறியிருந்தால்,தகவல்களை புதுப்பிப்பது அவசியம். மேலும்,ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் பெயர்,பாலினம்,பெற்றோர் பெயர்,பிறந்ததேதி,ஆதார் எண் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை பதிவுசெய்து,இம்மாதம்30ம் தேதிக்குள்,சமர்பிக்க வேண்டும்என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment