FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 October 2016

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு.

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் இது குறித்த அறிவிப்பினை தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. 

இம்மூன்று தொகுதிகளிலும் நவம்பர் 19 சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், நவம்பர் 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதே போல, புதுச்சேரி நெல்லிக்குப்பம் தொகுதியிலும் நவம்பர் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment