FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 October 2016

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி: விசாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே மையம் கொண்டுள்ள கியான்ட் புயல் வலுவிழந்து வருகிறது.

இந்த புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் 30 மற்றும் 31ம் தேதி முதல் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் கூறியள்ளது.தீபாவளியன்று, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment