FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 October 2016

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு பற்றி மந்திரிசபை இன்று முடிவு

இந்த ஆண்டு தொடக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

கடந்த ஜூலை 1–ந் தேதியிட்டு, இந்த உயர்வு அமல்படுத்தப்படும். இந்த யோசனை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் மத்திய மந்திரிசபை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டு உள்ளது. எனவே, இன்று இதுபற்றி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment