TNPTF அலுவல் செய்தி
நாள் : 14.09.2016
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் (TNGEA), தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) உள்ளிட்ட இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) உறுப்பு இயக்கங்கங்களும் இணைந்து போராடியது.
இப்போராட்டத்தின் விளைவாகவே, சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் 110 விதியின் கீழ், பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான வல்லுநர் குழுவை அமைத்தல், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இறந்தவர்களுக்கான பணப்பலன்களைக் கிடைக்கச் செய்தல் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், வல்லுநர் குழு போராட்டக்களத்தில் இருந்த அனைத்து இயக்கங்களுக்கும் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கான அழைப்பினை வழங்காமல், போராட்டக்களத்திலேயே இல்லாத கூட்டமைப்புகளையும் சேர்த்து பொத்தாம் பொதுவாக அழைப்பு விடுத்துள்ளது. இது STFI-ன் கீழுள்ள 1 இலட்சம் ஆசிரியர்களின் உரிமைக் குரலைப் புறக்கணிப்பதாக உள்ளது. இதனால் வல்லுநர் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் கண்துடைப்பு நிகழ்வோ என்ற ஐயத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இது குறித்தும், வல்லுநர் குழுவினை யாரும் தவறான பாதையில் பயணிக்கச் செய்துவிடக் கூடாது என்பது பற்றியும் நிதித்துறைச் செயலாளரிடம் நேரில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தால் அரசு ஊழியருக்கும், அரசிற்கும் ஏற்பட்டுள்ள நேரடி இழப்புகள் குறித்தும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதற்கான அவசியம் குறித்தும் உரிய ஆதார ஆவணங்களுடன் நாளை வல்லுநர் குழுவை சந்திக்க உள்ளோம். இவ்வாறு இன்று நடைபெற்ற அனைத்து அச்சு & காட்சி ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ச.மோசஸ்
மாநிலத் தலைவர்
தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தகவல் பகிர்வு :
ஆ.முத்துப்பாண்டியன் TNPTF

No comments:
Post a Comment