FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

20 August 2016

எஸ்எம்எஸ்., மூலம் வருமான வரி விபரம்

புதுடில்லி: வருமான வரி செலுத்துபவர்களுக்கு,மாதந்தோறும் தங்களின்சம்பளத்தில் இருந்துகழிக்கப்படும் வரிதொகை குறித்த தகவலைஎஸ்எம்எஸ்மூலம் தெரிவிக்கும் முறை விரைவில் அறிமுகம்

செய்யப்பட உள்ளது. 

வரி செலுத்துவோர் மற்றும் வருமானவரித்துறையினரிடையேநல்லுறவைஏற்படுத்துவதற்காகவும், வரி செலுத்துவோருக்குஏற்படும்இடையூறுகளை போக்குவதற்காகவும் இந்த முறைஅறிமுகம்செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.இன்னும்ஒன்று அல்லது 2 மாதங்களில் இதற்கான திட்டம்தயார்செய்யப்பட்டு விடும் என மத்தியநேரடி வரித்துறைகழக தலைவர் ராணிசிங் நாயர் தெரிவித்துள்ளார்.


மேலும்அவர் கூறுகையில், நிறுவனங்கள் தங்களின்ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம்செய்யும்வருமான வரியை செலுத்துவதில்லை எனநிறையபுகார்கள் வருகின்றன. இத்தகைய குழப்பத்தைசரிசெய்வதற்காகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல்அனுப்பும்முறை கொண்டு வரப்பட உள்ளது.


இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்குஅவர்கள்சம்பளத்தில் இருந்து பிடித்தம்செய்யப்படும்வருமான வரித் தொகை,வருமானவரித்துறையிடம் போய் சென்றதா, இல்லையாஎனதெரிவிக்கப்படும். ஒருவேளை வரித்தொகைசெலுத்தப்படவில்லை என்றால் உங்கள்நிறுவனத்திடம்உடனடியாக கேட்டு விடலாம் என்றார்.

No comments:

Post a Comment