FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

8 July 2016

சிறுசேமிப்புக்கு வட்டி அஞ்சல் துறை புதிய அறிவிப்பு

அஞ்சலக சிறுசேமிப்புக்கான வட்டி விகிதங்கள் இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்.இது தொடர்பாக மத்திய பத்தி ரிகை தகவல் அலுவலகம் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங் களுக்கான வட்டி விகிதங்கள் 2016-17 நிதியாண்டிலிருந்து ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். சிறு சேமிப்பு திட்டத்துக்கான தற்போது நடைமுறையிலுள்ள வட்டி விகிதங் களே நடப்பு 3 மாத காலத்துக்கு அதாவது 30.09.2016 வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு அதிகபடி யாக 8.6 சதவீத வட்டி கொடுக்கப் படுகிறது. பொன்மகன் பொது வைப்பு நிதித் திட்டத்தில் 8.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதற்குமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கு மாறு மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment