FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

11 July 2016

மாணவர்களை வைத்து குடிநீர் தொட்டி சுத்தம்: ஆசிரியர் சஸ்பெண்ட்

தர்மபுரி மாவட்டம், வத்தல் மலை பெரியூர் அரசு துவக்கப்பள்ளி கட்டடத்தின் முன் தரைக்கு கீழ் பாதாள குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை கடந்த சில தினங்களுக்கு முன், இந்த பள்ளி ஆசிரியர், மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளார். 

இதே போல் கழிவறையையும் மாணவர்களை வைத்தே சுத்தம் செய்துள்ளார். இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அவர்கள் விசாரித்ததில், அப்பள்ளி ஆசிரியர் காந்தி, மாணவர்களை குடிநீர் தொட்டி, கழிவறை தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரபாகரன், ஆசிரியர் காந்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment