சென்னை:கத்திரி வெயில் தொடங்கி 5 நாட்கள் முடிவடைந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இல்லாமல் மிதமான வானிலை நிலவுகிறது. இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய அலுவலக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் அளித்த பதில் வருமாறு:-
தமிழகத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் இருந்து கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து ஈரப்பதம் கலந்த காற்று வீசுகிறது. அந்த காற்று தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு வீச வாய்ப்பு உள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக உள்மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஆயக்குடியில் 6 சென்டி மீட்டர் மழை பெய்தது. பெரியகுளத்தில் 3 செ.மீ, தேனி மாவட்டம் பெரியார், செங்கோட்டை, வால்பாறை ஆகிய பகுதிகளில் 2 செ.மீ, தென்காசி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ, மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து இப்பகுதிகளிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment