FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 May 2016

ஆசிரியராக உள்ளோரே❗ ஆசிரியர் ஆகவுள்ளோரே❗ உங்கள் வாக்கு யாருக்கு❓❓ நினைவூட்டி நிதானிக்க சில .

👆🏼❓👆🏼❓👆🏼❓👆🏼❓👆🏼❓

ஆசிரியராக உள்ளோரே❗

ஆசிரியர் ஆகவுள்ளோரே❗

உங்கள் வாக்கு யாருக்கு❓❓

நினைவூட்டி நிதானிக்க சில . . . .

நடப்பு ஆண்டின் மாணவர் எண்ணிக்கைக்குப் பதில் முந்தைய ஆண்டின் அடிப்படையில் இன்றைய மாணவ-ஆசிரியர் விகிதத்தை நிர்ணயிக்கும் அறிவாண்மை பற்றி சற்றும் சிந்தியாதவர்களுக்கா❓

பெற்றோரை மாயவலையில் இருந்து மீட்காது தமிழ்வழிக் கல்வியை அழிக்க ஆங்கில வழிக்கல்வியை உரிய சிறப்பு ஆசிரியர்களின்றி அனுமதித்தவர்களுக்கா❓

அரசு மது பானக் கடைகளை மூடக்கோரும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்றால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர்களுக்கா❓

புதிய அரசுப் பள்ளிகளுக்கான கருத்துருக்களை கிடப்பில் போட்டுவிட்டு தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அதிக அளவில் அனுமதி அளித்தவர்களுக்கா❓

உலக வங்கி & பன்னாட்டு நிதிய அறிவுறுத்தலில் இந்தியாவில் CPS-ஐ புகுத்தியவர்களுக்கா❓

வரிந்து கட்டிக் கொண்டு முழுமையாக நடைமுறைப் படுத்தியவர்களுக்கா❓

கல்வியில் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் காவியைப் புகுத்தி வருபவர்களுக்கா❓

கல்வியை வணிகமாக்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுப்போட துணிந்துள்ளவர்களுக்கா❓

இன்று நீக்குவேன் என்று கூறினாலும் அன்று, CPS-ஐ மக்களவையில் நிறைவேற வாக்களித்தவர்களுக்கா❓

அன்று மத்தியில் எதிர்த்துவிட்டு, மாநிலத்தின் சுயவிருப்பம் தான் என்ற நிலையிலும் தமிழ்நாட்டில் முன்தேதியிட்டு CPS-ஐப் புகுத்தியவர்களுக்கா❓

எள்முனை அளவு குறையா ஊதியம் வழங்குவேன் என்று கூறிவிட்டு மாதந்தோறும் ரூ.9000 இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கா❓

இடைநிலை ஆசிரியர்கள் 10-ம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளவர்கள் (!?). அவர்களுக்கு இந்த ஊதியமே போதும் என்றவர்களுக்கா❓

1,00,000 ஆசிரியர்கள் உரிமைக்காகச் சென்னையில் குழுமியபோது ரூ.750/-ஐ பிச்சையென வழங்கியவர்களுக்கா❓

நான் வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவேன்; ஊதிய முரண்பாட்டைக் களைவேன் எனக் கூறி இறுதிவரை கண்டுகொள்ளாமல் இருந்தவர்களுக்கா❓

மாறுதல் கலந்தாய்வில் இடங்களை மறைத்துப் பல இலட்சங்களுக்கு விற்று உங்கள் உறவுகளுடன் இணைய முடியாமல் செய்தவர்களுக்கா❓

ரூ.2,00,000 - ரூ.7,00,000 வாங்கிக் கொண்டு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் மாவட்ட மாறுதல் வழங்கியவர்களுக்கா❓

ஆசிரியப் பயிற்சியில் 8-ம் வகுப்பு வரை பணியாற்றப் பயிற்றுவித்துவிட்டு 6,7&8 வகுப்பிற்கான அறிவு இல்லையெனக் கூறி 1-5 வரை மட்டும் பணி நியமனம் செய்தவர்களுக்கா❓

தமிழக அரசே தேர்வு நடத்தித் தெறிவான ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு மீண்டுமொரு தகுதித் தேர்வினை அனுமதித்தவர்களுக்கா❓

அறிவியல் ஆசிரியர்களுக்குக் கணிதப்பாடத்திலும், கணித ஆசிரியர்களுக்கு அறிவியல் பாடத்திலும் கேள்விகள் கேட்டு பொருந்தாத் தேர்வை நடத்திவருபவர்களுக்கா❓

தகுதித் தேர்வு மதிப்பெண்ணால் தகுதி வராது என்று பல ஆண்டுகளுக்கு முன் பயின்ற 10, 12-ம் வகுப்பு மதிப்பெண்ணையும் இணைத்தவர்களுக்கா❓

தகுதித் தேர்வில் முறையான வழிமுறைகளைப் பின்பற்றாததால் பல வழக்குகள் பதியப்பட்ட, 2 ஆண்டுகளாகத் தேர்வே நடத்த முடியா சூழலுக்கு வித்திட்டவர்களுக்கா❓

[இவ்வளவு இன்னல்களுக்கு இடையேயும் நாம் பெற்றுள்ள உரிமைகள் எதுவும் ஆட்சியாளர்கள் தானே முன் வந்து வழங்கியவை அல்ல. அவையாவுமே நமது போராட்டங்களால் விளைந்த பயனே!]

மனதிருத்தி வாக்களிப்பீர் !

மறவாது வாக்களிப்பீர் ! !

✍🏼சிறு துளி💧

No comments:

Post a Comment