சென்னை : தமிழகத்தில், ஒரு சில இடங்களில், இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடலோர மாவட்டங்களை தவிர்த்து, உள் மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவுகிறது. அப்பகுதிகளில், 103 - 107 டிகிரி,'பாரன்ஹீட்' வெப்பம், பதிவாகி வருகிறது. இந்த நிலையில், கிழக்கில் இருந்து வீசும் ஈரப்பதம் உள்ள காற்று, வெப்பத்தின் தாக்கத்தை சற்று குறைத்துள்ளது. சேலம், தர்மபுரி, திருச்சி, வேலுார் நகரங்களில், அதிகபட்சமாக நேற்று, 104 டிகிரி, 'பாரன்ஹீட்' வெப்பம் பதிவானது. கடலோர மாவட்டங்களில், 95 - 99 டிகிரி,'பாரன்ஹீட்' வெப்பம் பதிவானது. சென்னை வானிலை மையம் நேற்று, வெளியிட்ட அறிக்கையில், 'வெப்ப சலனத்தால், தமிழகத்தில், ஓரிரு இடங்களில், இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் பின், ஏப்., 21 வரை வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் சற்று மேக மூட்டத்துடன் இருக்கும்' என, கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment